படாய் படுத்தும் பல் வலியிலிருந்து விடுபட இதோ இயற்கை வைத்தியம்

pain teeth lifestyle-health
By Nandhini Dec 05, 2021 11:37 AM GMT
Report

வலிகளில் கொடுமையான ஒன்று பல் வலி தான். அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும்.

பெரும்பாலானவர்களுக்கு புளிப்பான, இனிப்பான, குளிர்ச்சியான, சூடான இப்படி எந்த உணவை சாப்பிட்டாலும் பற்களில் கூச்சம் ஏற்படும், சிலருக்கு குளிர்மையான எந்த ஒரு உணவையுமே சாப்பிட முடியாது. சிலருக்கு சொத்தைப் பல் இருக்கும், பற்களில் நடுவில் விழுந்திருக்கும் குழி அதிக வலியை கொடுக்கும். உணவுகள் போய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான் உயிர் போய் வந்துவிடும்,

பல் வலி ஏற்பட காரணங்கள் -

வலிகளில் கொடுமையான ஒன்று பல் வலி தான். அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும்.

சொத்தைப் பல் -

பல் வலி பற்களைச் சுற்றிலும் தாடையிலும் மிகுந்த வலியை ஏற்படுத்தக் கூடியது. பல் சிதைவு அதாவது பல் சொத்தை அப்படியே நம் பற்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பற்களையே சிதைத்து விடும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டு பற்களின் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம்.

பல் வலியை தடுக்க வழிமுறைகள் -

வேப்ப மரப்பட்டை

வேப்ப மரப்பட்டையோடு ஆறு கிராம்பு சேர்த்து நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கும் வரை கொதிக்க விட்டு, அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவினால் பல் வலி நீங்கும்.

கொய்யா இலை

கொய்யா இலையை காயவைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்க அதை கொண்டு பற்களை துலக்கினால் பல் வலி குறையும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் பொதுவாக தீப்பட்ட புண் மற்றும் சிறிய காயங்களுக்கு பயன்படுகிறது. இந்த ஜெல்லைக் கொண்டு பற்கள் மற்றும் ஈறுகள் சுத்தம் செய்ய பயன்படுகிறது. இதிலுள்ள இயற்கையான ஆன்டி பாக்டீரியல் தன்மை பற்சொத்தைக்கு காரணமான கிருமிகளை அளிக்கிறது. இந்த ஜெல்லை வலியுள்ள பற்களில் வைத்து மசாஜ் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

கிராம்பு

முழு கிராம்பையும் வாயில் வைத்து மென்று அதன் சாற்றை பல் வலி உள்ள இடத்தில் படுமாறு செய்யலாம். 30 நிமிடங்கள் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். மெல்ல முடியாதவர்கள் அதை அப்படியே பல் வலி இருக்கும் இடத்தில் வைத்திருக்கலாம்.

படாய் படுத்தும் பல் வலியிலிருந்து விடுபட இதோ இயற்கை வைத்தியம் | Lifestyle Health Teeth Pain