அடேங்கப்பா.. தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

Papaya
By Nandhini 3 மாதங்கள் முன்

அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. பப்பாளி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட.

இது பழங்களின் ஏஞ்சல் அழைக்கப்படுகின்றது.ஏனென்றால் பப்பாளிப்பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால் அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

பப்பாளி பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம். இது இனிப்பு கொண்ட சுவை மிகுந்த பழம் மட்டுமன்றி பல நன்மைகளையும் உள்ளடக்கியது.

அதாவது நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த பழம். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது.

papaya - benifit

தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் நமக்கும் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் - 

முகத்தோல் சுருக்கம்

தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால், தோல் சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.

கண்களுக்கு

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உங்களின் கண் பார்வை அதிகரிக்கும். மேலும், உங்களுக்கு மாலை கண், கிட்ட பார்வை, தூர பார்வை போன்ற பிரச்சினை ஏற்படாமல் பப்பாளி தடுக்க உதவி செய்யும்.

இரத்தத்திற்கு

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், பப்பாளியில் உள்ள நார்ச்சத்தானது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தங்கள் உணவில் பப்பாளியினை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆண்மை குறைபாடு

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் உண்டாக்கும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

புற்று நோய்க்கு

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், புற்று நோயைக் குணப்படுத்தும் சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து புற்றுநோயை உண்டாக்கும் டாக்ஸின்களை உடலிலிருந்து முற்றினும் வெளியேற்றி வயிற்றில் ஏற்படும் புற்று நோயை முற்றினும் தடுக்க உதவி செய்யும்.

மாதவிடாய்

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு இப்பழம் ஒரு அருமருந்தாக விளங்கும்.

மலச்சிக்கல்

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, புரோட்டீனான பாப்பைன் செரிமான மண்டலத்தை சரியாக இயக்க செய்கிறது. இதனால், மலச்சிக்கல் ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கும்.