தினமும் தேனில் ஊற வைத்த வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இது தெரியாம போச்சே....

onion benefits immunity weight loss lifestyle-health
By Nandhini Dec 25, 2021 11:23 AM GMT
Report

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயம் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நல்ல முறையில் ஊக்குவிக்கிறது.

இதனால் நமது உடலில் நோய் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். வெங்காயத்தை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய வலிமை கிடைக்கிறது.

வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்குன்னம் இங்கு பார்ப்போம் -

வெங்காயத்தை எப்படி தேனில் ஊற வைக்கும் முறை -

மெல்லிசாக வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஸ்லைஸ் வெங்காயத்திலும் தேனை ஒரு டீஸ்பூன் அளவு தெளிக்க வேண்டும். ஒரு ஸ்லைஸ் வெங்காயத்தின் மீது மற்றொன்று என அடுக்க வேண்டும். 24 மணிநேரம் இதை ஊறவிடுங்கள். மறுநாள் நீங்கள் ஊறவைத்த இந்த பாத்திரத்தில் சிரப் போன்ற நீர் தங்கியிருக்கும். இதை குடித்து வரவும்.

சளித்தொல்லை நீங்க

தேனில் ஊற வைத்த வெங்காயத்தை, ஒரு நாளுக்கு 3 - 4 முறை எடுத்துக் கொண்டால் சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே விரைவாக சரியாகி விடும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தேனில் ஊற வைத்த வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

இரத்தம் சுத்திகரிக்க

தேனில் ஊற வைத்த வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால், இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க உதவி செய்யும்.

செரிமானத்திற்கு

தேனில் ஊற வைத்த வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால், செரிமானத்தை ஊக்கவித்து, நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக அமையும். இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவி செய்யும்.