இந்த நேரத்தில் மட்டும் பால் குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க...
உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.
மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துக்கின்றனர்.
பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், மோர் ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கிய வாழ்க்கை முறையைத் தக்கவைக்க இரும்பு சத்தை தவிர அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களும் பாலில் உள்ளன. பாலில் புரதம், வைட்டமின் ஏ, பி 1, பி 2, பி 12, டி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நீண்ட ஆயுள் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் மீண்டும் முக்கியத்துவம் தரும் வேளையில் பால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலின் நன்மைகள் -
- 1. நீங்கள் உடல் பருமன் (Obesity) பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தால், பால் உங்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும். புரதச்சத்து நிறைந்த பால் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்
- 2. காலையில் தினமும் பால் சாப்பிட்டு வந்தால் இரவில் நன்றாக தூங்கலாம். பால் குடிப்பதால், தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
- 3. பாலில் உள்ள புரதச்சத்து, ரத்தத்தில் டிரிப்டோபனின் அளவை அதிகரிக்கும். பாலில் உள்ள பண்புகள் மனச்சோர்வு பிரச்சனையை சமாளிக்க உதவும்.
- 4. காலையில் பால் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
- 5. எலும்புகள் உருவாகவும் வலுவாக இருக்கவும் கால்சியம் இன்றியமையாததாக கருதப்படுகிறது.காலை உணவின் போது பால் அருந்துவதன் மூலம் எலும்புகள் வலுவடையும்.
பால் குடிக்க சரியான நேரம் -
- காலை உணவின் போது பால் உட்கொள்வது இரவில் நல்ல தூக்கத்தைப் (Sleep) பெற உதவி செய்யும். உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், காலை உணவின் போது பால் உட்கொள்வது நன்மையைத் தரும்.