சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் எவைன்னு தெரியுமா?
சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அவற்றின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இரத்தத்தில் இருந்து அசுத்தங்களை வடிகட்டுவதே ஆகும். மேலும், அவை உடலில் உள்ள கனிம அளவை பராமரிப்பது போன்ற பிற செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன.
நோய் இல்லாத வாழ்க்கைக்கு ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாடு மிக அவசியம். சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம்.
எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம்.
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் எவைன்னு பார்ப்போம் -
சோடா
சிறுநீரக பிரச்சனை உள்ள ஒருவர் சோடா அதிகமாக உட்கொள்வதைத் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த பானத்தில் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. இது சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். அதிக சோடியம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பிரவுன் அரிசி
பிரவுன் அரிசி சிறுநீரகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இதில் பாஸ்பரஸ் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. எனவே அதிகபடியாக எடுத்துக்கொள்வதை தடுக்க வேண்டும். உடலில் அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியம் அளவு உள்ளது. அதேபோல தக்காளியில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. எனவே வாழைப்பழம் மற்றும் தக்காளியின் அதிக நுகர்வினை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு ஆரஞ்சு சிறுநீரகத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
ஆரஞ்சு
மட்டுமல்ல திராட்சை, அவுரிநெல்லிகள் போன்ற பிற சிட்ரிக் பழங்களையும் சிறுநீரக பிரச்சினைகளை சந்திப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சி சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதில் அதிக அளவு உப்பு மற்றும் புரதம் உள்ளது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதில் அதிக அளவு உப்பு மற்றும் புரதம் உள்ளது.