தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க...

Water
By Nandhini 3 மாதங்கள் முன்

வெந்நீரின் அவசியம்

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது.

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வாருங்கள்.

உணவிற்கு பிறகு வெந்நீரை அருந்துவதால் கெட்ட கொழுப்பு நம் உடலில் சேராது. அதோடு இதன் மூலம் ரத்தத்தில் உள்ள நஞ்சுக்கள் வெளியேற்றப்பட்டு ரத்தம் சுத்தமாகும்.

hot water

தினமும் வெந்நீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -

இரத்த ஓட்டம் சீராக

தினமும் அதிகளவு வெந்நீர் குடிப்பதினால் இரத்த குழாய்கள் விரிவடையும், இதனால் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது.

எடை குறைய

வெந்நீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்ட பாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து விடும்.

சளி, இருமல்

வெந்நீரை தினமும் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.

முடி வளர்ச்சிக்கு

வெந்நீரை தினமும் குடித்து வந்தால், தலைமுடிகளின் வேர்கள் சுறுசுறுப்பாகி முடிகள் செழித்து வளர உதவி செய்யும்.

மாதவிடாய் பிரச்சினை

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறைந்து விடும்.

செரிமானத்திற்கு

உணவுக்கு பின் தினமும் வெந்நீர் அருந்தி வந்தால், உணவையும், கொழுப்பையும் நன்றாக உடைத்து செரிமான மண்டலத்தை சீராக இயக்க உதவி செய்யும்.