சுருக்கென்று குத்தும் ஒற்றைத் தலைவலியா? கவலை வேண்டாம்.. இதோ வீட்டு வைத்தியம்

headache Home remedies lifestyle-health-
By Nandhini Dec 20, 2021 11:16 AM GMT
Report

அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது.

நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். தலை வலி வர பல காரணங்கள் உள்ளன.

ஜலதோஷம் காரணமாக தலை வலி ஏற்படலாம், சிலருக்கு அதிகமாக சிந்திப்பதன் மூலம் தலைவலி ஏற்படலாம், அதிக கோவம் கொண்டால் தலை வலி ஏற்படலாம், அதிக சத்தம் உள்ள இடத்தில இருந்தால் தலை வலி ஏற்படலாம்.

ஒற்றை தலைவலி வகைகள் -

கண் நரம்பு ஒற்றைத் தலைவலி

பக்கவாத ஒற்றைத் தலைவலி

முக நரம்பு ஒற்றைத் தலைவலி

ஒற்றை தலைவலி அறிகுறிகள் -

ஒற்றை தலைவலி வந்தவுடன் சிலருக்கு வாந்தி உண்டாகும். படபடப்பு, அதிக களைப்பு, பசியின்மை ஏற்படும். மூக்கிலிருந்து நீர் கசியும். அதிக மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள் . லேசான தலைவலியுடன் ஆரம்பித்து தீவிர தலைவலியாக தொடர்ந்து நீடிக்கும் சிலருக்கு 72 மணி நேரம் கூட தொடர்ந்து நீடிக்கும்.

ஒற்றை தலைவலி குணமாக்க... இதோ பாட்டி வைத்தியம் -

பால், இஞ்சி சாறு பால், இஞ்சி சாறு மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு மூன்றையும் கலந்து சூடு செய்து தலைக்கு தடவி ஒரு ஐந்து நிமிந்து நன்கு மசாஜ் செய்த பின்பு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்தால் தலை வலி நீங்கும்.

நொச்சி இலை

நொச்சி இலை சாறு தலைவலியை போக்கக்கூடியது. ஆகையால் நொச்சி இலையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதை நெற்றியின் இருபுறம் மட்டும் தடவினால் தலைவலி நீங்கும்.

வில்வ இலை

வில்வ இலைக்கு நீண்ட நாள் தலைவலியை குணமாக்கி மருத்துவ குணம் உண்டு. வில்வ இலையை நன்கு அரைத்து வைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை தொடர்ந்து ஒரு பட்டாணி அளவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் தொல்லை கொடுத்த தலைவலி நீங்கும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

சுடுநீர்

குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

கடுகுப் பொடி

அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

ஆரஞ்சு, கேரட்

2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.