கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலை வேண்டாம்... - இதோ பாட்டி வைத்தியம்...!

Hair Growth
By Nandhini 3 மாதங்கள் முன்
110 Shares

பெண்களின் அழகே கூந்தல் தான். அதனால் தான் அழகான, நீளமான கூந்தல் கொண்ட பெண்களை அனைவருக்கும் பிடிக்கும். தலையில் கூந்தல் நிரம்ப பெண்கள் பூ சூடிக் கொள்வது அவர்களுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும்.

கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல்.

சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது.

முடி வளராமல் அவதிப்படுவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றினாலே சில மாதங்களிலேயே நல்ல பலனை காணலாம்...

தேவையான பொருட்கள்

 • செம்பருத்தி பூ - 10 இதழ்கள்
 • செம்பருத்தி இலை - 10 இலைகள்
 • தேங்காய் எண்ணெய் - 200 மி.லி.

செய்முறை -

 • செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி , ஈரமில்லாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 • நீர் விடாமல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் இந்த செம்பருத்தி பேஸ்ட்டை அதில் போட வேண்டும்.
 • பின்னர், அதில் 1 ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்க்க வேண்டும்.
 • மிதமான தீயில் கருகாமல் கொதிக்க விட வேண்டும். நுரை அடங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும்.
 • பின்னர் இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

hair growth

உபயோகிக்கும் முறை -

 • இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்த வேண்டும்.
 • தலை முடியின் வேர்கால்களை தூண்டும்படி ஸ்கால்ப்பில் 1 ஸ்பூன் அளவு தேய்த்து வர வேண்டும்.
 • முடியின் வேர்ப்பகுதியில் மட்டும் தடவுவதால் பிசுபிசுப்பு இருக்காது.
 • இவ்வாறு தினமும் செய்து வந்தால் மிருதுவான, அடர்த்தியான கூந்தலைப் பெறலாம். கூந்தல் உதிர்வது குறைந்துவிடும்.