அடேங்கப்பா.. கிடுகிடுவென உடல் எடை குறைக்கும் க்ரீன் டீயின் எண்ணிலடங்கா நன்மைகள்? - மிஸ் பண்ணாம படிங்க...!
நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். மருத்துவமனைக்கு போகாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நம் அனைவருமே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அப்படியான வழிமுறைகளில் ஒன்று தான் இந்த க்ரீன் டீ.
பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி, டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன் டீ குடித்தால் விரைவில் எடை குறைப்பு உண்டாகும் என்ற நம்பிக்கை தான்.
கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன.
உலகிலேயே ஜப்பானியர்கள் தான் கிரீன் டீயை அதிகம் பருகுகிறார்கள். இதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
தினமும் க்ரீன் டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம் -
தலை முடிக்கு
தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால், உங்கள் சருமத்தையும், தலை முடியையும் மேம்படுத்த உதவும்.
உடல் எடை குறைக்க
தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகளை எரித்து, தேவையற்ற கொழுப்புகள் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.
மாரடைப்பை தவிர்க்க
தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால், கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. இது இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
வாய் துர்நாற்றம்
தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.
பிறப்புறுப்பு புற்றுநோயை தடுக்க
தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால், ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும். கிரீன் டீ குடித்தால், உடலில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தி பெற
தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள அமினோ அமிலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.