கால்சியம் சத்தை அள்ளி தரும் திணை இனிப்பு பொங்கல்! சுவையாக செய்வது எப்படி?

By Nandhini May 19, 2022 05:03 AM GMT
Report

தினையை நாம் சிறுதானியம் என்ற வகையில் சேர்க்கிறோம். இதனை சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பல வகையாக பிரிக்கிறார்கள். தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ என்று பெயர்.

தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும்பொழுது உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும். கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது.

இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.

இவ்வளவு நன்மைகள் தினை அரிசி போன்ற சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளதால் அரிசி போன்ற தானியங்களை தவிர்த்து சிறுதானியங்களை உண்டு வாருங்கள் உறவுகளே.

தேவையான பொருட்கள் -

திணை - 1 கப்

காய்ந்த கருப்பு - 10

பாதாம்- 5

தேங்காய் பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்

நெய் - 2

தண்ணீர் / பால் - 4 கப்

ஏலக்காய் - 2

வெல்லம் - 3/4 கப்

செய்முறை -

  • திணையை நன்கு கழுவி கொள்ளவும். பின்னர், திராட்சை, பாதாம்,தேங்காயை நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
  • சிறிது நெய் ஊற்றி தேங்காய், திராட்சை மற்றும் பாதாமை சேர்த்து 1 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கி கொள்ள வேண்டும்.
  • அதே பாத்திரத்தில் திணையை சேர்க்க வேண்டும். முதலில் 2 கப் தண்ணீர் மற்றும் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் ஏலக்காயை சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு, வதக்கி வைத்த நட்ஸை சேர்க்க வேண்டும்.
  • வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதை பாகாக்கி கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதில் திணையை சேர்க்க வேண்டும். அதோடு மீதம் உள்ள 2 கப் தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • 20 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • சுவையான மற்றும் சத்தான திணை இனிப்பு பொங்கல் ரெடி.