தப்பித்தவறி கூட வெறும் வயிற்றில் இந்த பொருட்களையெல்லாம் சாப்பிடாதீங்க.. பின்விளைவுகளை சந்தீப்பீங்க...
காலையில் முதல் உணவாக இருப்பதால், எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இது நாள் முழுவதும் நம் உடலை சீராகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். இல்லையெனில் ஒருவர் எந்த நேரத்திலும் நோய்வாய்ப்படக்கூடும்.
ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. ஆனால் அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. புதிய ஆய்வின் படி, சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கு காரணம், அந்த உணவுகளில் உள்ள ஆசிட்டுகளும், வயிற்றில் உள்ள படலத்தை பாதிக்கும் வகையிலான பொருள் இருப்பதும் தான் காரணம்.
காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் எவை எவைன்னு பார்ப்போம் -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால் இதில் டானின் மற்றும் பெக்டின் உள்ளது. இதனால் இதை வெறும் வயிற்றை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும். வாழைப்பழம் - வாழைப்பழம் முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன, ஆனால் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் மெக்னீசியத்தின் அளவு அதிகரிக்கிறது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் C மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், தக்காளியில் உள்ள டானிக் அமிலம் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் இரைப்பை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உணவுக்குழாய் மற்றும் புண் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சில சிட்ரஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகள்
வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிடுவதால் உங்களுக்கு வயிற்று எரிச்சல் ஏற்படும். இது அமில எதிர்வினைகள் மற்றும் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும். அவை மிகவும் கூர்மையான மற்றும் வலுவான சுவை கொண்டவை, இது அஜீரணத்தைத் தூண்டும். பூண்டு, சூடான மிளகாய், இஞ்சி ஆகியவை காரமான உணவுகளுக்கு எடுத்துக்காட்டு.
சோடா
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
மாத்திரைகள்
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.
ஆல்கஹால்
பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.