குடல் புண்களை ஆற்றும் புளிச்சக்கீரை துவையல் - சுவையாக செய்வது எப்படி?
lifestyle-health-food
By Nandhini
3 years ago

Nandhini
in ஆரோக்கியம்
Report
Report this article
காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது.
இது உணவை செரிமாணம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. புளிச்ச கீரையை குழம்பு, கூட்டு, துவையல் போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
அடிக்கடிக்கு புளிச்சக்கீரை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் வல்லமை புளிச்சக்கீரைக்கு உண்டு.
தேவையான பொருட்கள் :
புளிச்சக்கீரை - 2 கட்டு
கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.
- இவை நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
- மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்க வேண்டும்.
- கோங்குரா ஆறியதும் தேவைப்பட்டால் புளியை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற வேண்டும். இறுதியாகப் பொடித்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து நன்கு அரைத்தெடுக்க வேண்டும்.
- சுவையான புளிச்சக்கீரை துவையல் ரெடி.