இரும்புச் சத்தை வாரி கொடுக்கும் கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health-food
By Nandhini Aug 18, 2021 01:06 PM GMT
Report

நமது ஆரோக்ய உணவுகளின் பட்டியலில் முதல் இடத்தை வகிப்பது கேழ்வரகு. நம் உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து, புரதம், இரும்புச் சத்து கேழ்வரகில் அதிகம் உள்ளது.

க்ளுட்டன் இல்லை என்பதால் (gluten free) உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடிப்பவர்கள் கேழ்வரகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

கேழ்வரகில் செய்த பண்டங்களின் நிறம் வேண்டுமானால் குழந்தைகளை கவரும் வகையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் சுவையும் மணமும் அது தரும் சக்தியும் வேறு எந்த ஜங் புட்டுக்கும் கிடையாது.

இரும்புச் சத்தை வாரி கொடுக்கும் கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை! சுவையாக செய்வது எப்படி? | Lifestyle Health Food

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 2 கப்

பாசிப் பருப்பு - 2 கைப்பிடி

தேங்காய்த் துருவல் - அரை கப்

நாட்டுச் சர்க்கரை - அரை கப்

ஏலக்காய் - 4

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.

வறுத்த பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைய வேண்டும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சுவையான கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை ரெடி.