தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னு தெரியுமா?

lifestyle-health fenugreek-benefits வெந்தயம் நன்மைகள்
By Nandhini Mar 23, 2022 12:49 PM GMT
Report
135 Shares

பார்ப்பதற்கு சிறு கற்கள் போல கரடு முரடாக இருக்கும் வெந்தயம், ஆனால் உண்மையில் இதில் அடங்கியுள்ள நன்மைகள் நம் உடலுக்கு எத்தகைய பயன்களை தரவல்லது என்பது நம்மில் குறைந்த அளவு மக்களே அறிந்திருப்போம்.

வீட்டின் அஞ்சறை பெட்டியில் இடம் பெரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அன்றாடம் நாம் சமையவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நாம் சேர்க்கும் ஒரு பொருள் தான் வெந்தயம். இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது.

குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும். ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற கெமிக்கல்கள் உள்ளன. இவை செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது.

வெந்தய நீரை தினமும் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்

வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தை தணிக்கிறது.

மலச்சிக்கலை சீராக்கும்.

உடல் சூட்டினாலும் சிலருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருக்கும்.

எனவே வெந்தயத்தில் என்ன பசை இருப்பதால் முடி கொட்டுவது குறைந்து கருமையாகவும், நீளமாகவும் வளர உதவும்.

இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது.

வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்மை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

வெந்தயத்தை ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், அல்சர் பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும்.

வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

இருதய பிரச்சினைக்கு

வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இருதயத்தை பலமாக்குகிறது. இதனால் இருதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்க உதவுகின்றது.

பசி தீர்க்க

வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான திறன் மேம்படுகிறது. இதனால் பசியின்மை பிரச்சனை தீர்கிறது. வயிறு பொறுமல் நீக்கி குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

சர்க்கரை நோய்க்கு

வெந்தயத்தில் அதிக அளவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கிறது. எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.