முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க...!

Face Mask
By Nandhini 3 மாதங்கள் முன்

பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் தங்கள் சருமத்தை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க தான் ஆசைப்படுவார்கள்.

எல்லாருக்குமே முகம் அழகா இருக்கணும்னு ஆசை தான். அதுக்காக கிடைக்கிற எல்லாத்தையும் முகத்தில் போட்டு முகத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது.

நம் உடலின் மற்ற பாகங்கள் வேறு, முகம் என்பது வேறு. நாம் தினமும் முகத்துக்கு உபயோகிக்கும் சில பொருட்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் மூலக்கூறுகளும் இருக்கும்.

மனதில் உற்சாகம் இருந்தாலே, முகத்தில் அழகு மிளிரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், உடலுக்கு தேவையான சில சத்தான உணவுப் பொருட்களை உண்ணுவதால், உடல் அழகு மேலும் பொலிவு பெறும்.

face beauty tips

உங்கள் முகத்தை பளபள வைக்கும் அருமையான டிப்ஸ் பார்ப்போம் -

தக்காளி

தக்காளியை நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவை செய்ய முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கி நல்ல பொலிவை பெறலாம்.

கற்றாழை

கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மென்மையாகி பொலிவு பெறும்.

வாழைப்பழம்

வாழைப்பழம், 2 ஸ்பூன் கற்றாழை, பன்னீர் விட்டு குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

புதினா

புதினாவை அரைத்து எலுமிச்ச பழச்சாறுடன் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

சந்தனம்

சிவப்பு சந்தனத்தை, 2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளியுடன் சேர்த்து கலந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

தயிர்

2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியில், தயிர் சேர்த்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை தயிருடன் கலந்து, வாரத்தில் இரு முறை முகத்திற்கு ஃபேஷியல் செய்து வந்தால் முகம் பொலிவு பெறும்.