உங்கள் முகம் ஜொலி ஜொலிக்க வேண்டுமா? அப்போ.. இதை ட்ரை பண்ணுங்க...
எல்லோருக்குமே நம்முடைய முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும். கிளாஸி லுக் கிடைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.
ஆனால் இப்படி பளபளப்பான முகத்தைப் பெற நிறைய வழிகள் இருக்கின்றது. பெண்கள் சிரிக்கும் போது அப்படியே அவர்களுடைய அந்த இரண்டு கன்னமும் பளபளப்பாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நம்மில் பல பேருக்கு அந்த ஆசை இருக்கும்.
கொஞ்சம் ஜொலிஜொலிக்கும் சருமம் உடையவர்களை, பார்த்தால் அதே போல் நமக்கும் அழகான கன்னங்கள் வராதா என்ற ஏக்கம் கட்டாயம் எல்லோருக்கும் வரும்.
கவலை வேண்டாம், பக்க விளைவுகளும் இல்லாமல் நமது சருமத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு, இயற்கையில் உள்ளது சூப்பரான டிப்ஸ் இதோ -
தேங்காய் எண்ணெய் -
முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
ஆரஞ்சு, ரோஜா இதழ் -
ஆரஞ்சு பல தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கி அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து தினமும் இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு அடையும்.
கடலை மாவு -
உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும். மஞ்சள் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
பால் -
பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முட்டை முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
பாதாம் எண்ணெய் -
பாதாம் எண்ணெயிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
கற்றாழை -
கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
விட்டமின் இ எண்ணெய் -
இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.