தினமும் ஒரு கைப்பிடி இந்த பொருளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருமாம்!

Benefits lifestyle-health curry-leaves
By Nandhini Dec 19, 2021 07:46 AM GMT
Report
255 Shares

பொதுவாக பலருக்கு சாப்பிடும்போது எரிச்சலூட்டும் ஒன்று தான் சாப்பாட்டில் கிடக்கும் ஏலக்காய், மிளகு போன்றவை. அந்த வகையை சேர்ந்தது தான் கறிவேப்பிலையும்.

ஆனால் கறிவேப்பிலையில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் யாரும் அதை தனியாக எடுத்து வைக்க மாட்டார்கள். அப்படி கறிவேப்பிலையில் என்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

அத்தனை நன்மைகள் கொண்ட கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் -

சர்க்கரையின் அளவு சீராக

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கெட்ட கொழுப்பு

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு நல்ல கொழுப்புக்களை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமான பிரச்சனை

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின் அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

சளி

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

தினமும் ஒரு கைப்பிடி இந்த பொருளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருமாம்! | Lifestyle Health Curry Leaves