வெறும் வயிற்றில் அதிகமாக முந்திரி சாப்பிட்டால் ஆபத்து வருமா? இதைப் பாருங்க..

Cashew Benefits lifestyle-health
By Nandhini Dec 21, 2021 10:31 AM GMT
Report

பாயாசம், பிரியாணி மற்றும் பல உணவு வகைகளில் சேர்க்கப்படும் ஒரு பொருள் முந்திரிப்பருப்பு. இது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இது மிகவும் சுவையான பொருள். முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது.

உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.

முந்திரிப்பருப்பில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற்செயல் பாட்டுக்கும் உதவுகிறது.

வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு மிகவும் நல்லது. உப்பு சேர்த்து வறுக்கப்பட்ட முந்திரி பருப்பிற்கு பதிலாக சாதாரணமாக வறுத்த முந்திரிப்பருப்பை உபயோகப்படுத்துங்கள். புரோட்டீனுக்கு பதிலாக முந்திரி பருப்பை ஸ்நாக்ஸ் ஆக எடுப்பது மிக சிறந்தது.

ஆனால், வெறும் வயிற்றில் முந்திரியை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி பார்ப்போம் -

உயர் இரத்த அழுத்தம் -

வெறும் வயிற்றில் அதிகமாக முந்திரி சாப்பிட்டால், உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கும். இதனால், உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில், சோடியம் அளவு அதிகரிப்பது உங்கள் பிரச்சனையை மேலும் அதிகரித்து விடும்.

வாயுத் தொல்லை -

முந்திரி பருப்பில் நார்ச்சத்து உள்ளது. இதனால், வெறும் வயிற்றில் அதிகமாக முந்திரி சாப்பிட்டால், உடலில் நார்ச்சத்து அதிகரிக்கிறது. இதனால் வாயு பிரச்சனை ஏற்படும்.

சிறுநீரக பிரச்சனை -

முந்திரியில் பொட்டாசியம் உள்ளது. வெறும் வயிற்றில் அதிகமாக முந்திரி சாப்பிட்டால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரித்து நோயை அதிகரித்து விடும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் முந்திரியை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஒரு நபர் ஒரு நாளைக்கு 4 முதல் 5 முந்திரி சாப்பிடுவது நல்லது.