வெற்றிலையை மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்! இதோ பாருங்க...

betel Benefits lifestyle-health
By Nandhini Dec 22, 2021 11:39 AM GMT
Report

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

வெற்றிலை என்பது இந்திய நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருளாகும். வீட்டில் நடக்கும் சுப காரியமாய் இருந்தாலும் சரி, துக்க காரியமாய் இருந்தாலும் சரி வெற்றிலை தாம்பூலம் இன்றி நடக்காது.

வீட்டிற்கு வந்தவர்கள் எந்தவித மனக்கசப்பும் இன்றி செல்வதற்காக வெற்றிலை பாக்கு கொடுப்பது நமது பண்பாடாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது.

இந்த மூன்று ரகத்தையும் தனித்தனியே பார்க்கும் போது இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.

இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும். இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர். இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும்.

இயற்கை வலி

நிவாரணி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீங்கள் வெற்றிலையை வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது, ​​வெட்டுக்கள், காயங்கள், வீக்கம் போன்றவற்றிலிருந்து ஏற்படும் வலியிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

தாய்ப்பால் அதிகமாக சுரக்க

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

சளி, இருமல் போக்க

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

உடல் எடை குறைய

2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும். நரம்புகள் பலப்படுத்த 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

ஆண்மைக் குறைபாடு

வெற்றிலை நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டுகிறது. மேலும், வெற்றிலையை அளவோடு எடுத்துக்கொண்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

மலச்சிக்கல் சரியாக

வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

தலைவலிக்கு

ஈரத்தால் வரும் தலைவலிக்கு வெற்றிலையை சூடுபடுத்தி நெற்றியில் வைத்தால், வலி நீங்கும்.