வாரத்திற்கு 3 முறை இந்த துவையலை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்!

By Nandhini May 06, 2022 05:53 AM GMT
Report

பல வகையான சிறுதானியங்கள் நமது நாட்டில் அதிகம் விளைவிக்கப்பட்டு மக்களால் உண்ணப்படுகின்றன. அதில் மிகப் பிரபலமான ஒரு சிறுதானியம் கொள்ளு. இந்தக் கொள்ளு பெரும்பாலும் குதிரைகளுக்கு உணவாக கொடுக்கப்படுவது என்பதே பலரும் அறிந்த விடயமாக இருக்கிறது.

ஆனால் மனிதர்களுக்கும் பல வகையான ஊட்டச்சத்துக்களை அளிக்கவல்ல ஒரு தானிய தான் கொள்ளு ஆகும்.

உடல் எடையை குறைப்பதில் மிக சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக கொள்ளு இருக்கிறது. நமது நாட்டில் பண்டைய காலத்தில் இருந்தே உடல் எடையை குறைப்பதற்கான உணவாக கொள்ளு தானியம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, வாரத்திற்கு 3 முறை கொள்ளு துவையலை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறைய ஆரம்பிக்கும்.

கொள்ளு துவையல் செய்ய தேவையான பொருட்கள் -

கொள்ளு - கால் கப்

மிளகாய் வத்தல் - 3

உளுந்து - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

புளி - சிறு துண்டு

பூண்டு - 2 பல்

தேவையான உப்பு செய்முறை:

  • கால் கப் கொள்ளை எடுத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு கடாயை சூடாக்கி, அதில் கொள்ளைப் போட்டு நன்றாக மொறுமொறுப்பாக, வாசனை வரும் வரைக்கும் வறுத்தெடுக்க வேண்டும்.
  • அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மிளகாய் வத்தல், உளுந்து ரெண்டையும் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு வறுத்த மிளகாய், உளுந்து, கொள்ளு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய்த் துருவல், சிறு துண்டு புளி, பூண்டு, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் சிறிதளவு தண்ணிவிட்டுக் கரகரப்பா அரைத்தெடுக்க வேண்டும்.
  • ருசியான கொள்ளு துவையல் ரெடி.   

வாரத்திற்கு 3 முறை இந்த துவையலை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்! | Lifestyle Health