பித்தப்பை கல் ஆண்களை விட பெண்களுக்கு ஏன் அதிகமாக பாதிக்கிறது? அதன் அறிகுறிகளும், பக்கவிளைவுகளும்

lifestyle-health
By Nandhini Feb 01, 2022 10:46 AM GMT
Report

நாள் முழுக்க வேலை செய்யும் உறுப்புதான் பித்தப்பை. ஆனால், சில நேரங்களில் பித்தப்பை சரியாக வேலை செய்யாத போது திரவம் தேக்கிவிடும். கழிவுகளை வெளியேற்றாமல் இருக்கும். ஆண்களை விட பெண்களுக்கு பித்தப்பை பிரச்சினை அதிகளவில் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

காரணம் புரோஜெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன் கர்ப்பப்பை அமைதியாக்குவது போன்று பித்தப்பையையும் அமைதியாக்குகிறது.

பித்தப்பை கல் எப்படி ஏற்படுகிறது?

பித்தப்பை சரியாக வேலை செய்யாத போது அங்கு திரவம் தேங்கி அவை சிறு சிறு கல்லாக மாறிவிடும். உடல் பருமன் கொண்டவர்கள், அதிக குழந்தை பெற்றவர்களுக்கு, குடும்ப வரலாறு உள்ளவர்களுக்கு இந்த பித்தப்பை பிரச்சினை உருவாகலாம். இவர்களுக்கு எல்லாமே பித்தப்பை கல் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்த கல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆண்களுக்கும் வரலாம். வயதானவர்களுக்கும் கூட வரலாம். ஒன்று பித்தப்பை கழிவுகளை வெளியேற்றாமல் தன்னுள் தேக்கி வைத்துகொள்வது.

கொழுப்பு அதிகமாக வெளியேற்றும் போது கெட்ட கொழுப்புகள் வெளியேறினாலும் எஞ்சி இருப்பவை திப்பியாகி கோல்டு நிறத்தில் மென்மையாக இருக்கும். சிலருக்கு இவை இரண்டுமே இருக்கலாம். இன்னும் சிலருக்கு பித்தக்குழாயில் பூச்சிகள் சென்று முட்டையிடுவதாலும் அங்கு தொற்று உண்டாகி பித்தப்பை சேதப்படுத்தலாம்.

பித்தப்பை கல் அறிகுறிகள்

  • எல்லோருக்கும் பித்தப்பை கல் இருக்கும் அறிகுறி தெரியாது. பித்தப்பை கல் சைலண்ட் கல் என்று சொல்லலாம்.
  • பித்தப்பை கல் வலி என்பது பலூன் போன்ற அமைப்பில் அதன் கழுத்து பகுதியில் கல் வந்து வந்து போகும். இதனால் வலி ஆனது நெஞ்சு குழியில் வரும். மாரடைப்பு போன்று இருக்கும். பலரும் இந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் என்று நினைத்துவிடுவார்கள்.

பித்தப்பை கல்லால் ஏற்படும் பக்கவிளைவுகள்

  • பரோட்டா, தேங்காய்ச்சட்னி போன்ற கொழுப்பு உணவுகள் சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம் ஏற்பட்டு, பிறகு வலி உண்டாக்கும்.
  • கொழுப்பை வெளியேற்ற பித்தப்பை அழுத்தும் போது கல் கழுத்து பகுதியில் வந்து நிற்கும். அப்போது உண்டாகும் வலியானது கல் மீண்டும் பித்தப்பைக்குள் உட்காரும் வரை வலியை போக்காது.
  • சிலருக்கு வலி வராமலும் போகலாம். சிலருக்கு கல் பித்தப்பை வாய் பகுதியில் அடைத்து மீண்டும் பித்தப்பைக்குள் திரும்பாமல் இருந்தால் இரத்த ஓட்டம் குறைந்து விடும். அப்போது பித்தப்பை கெடுவதற்கு வாய்ப்புண்டு.
  • இதனால் கிருமித்தொற்று உண்டாகும். அப்போதுதான் வலி வலது பக்கம் நெஞ்சுக்கு கீழ் வர தொடங்கும். பிறகு தோள் பட்டை, வயிறு வலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.