முகம் பளபளன்னு மின்ன வேண்டுமா?... அப்போ இதை தினமும் யூஸ் பண்ணுங்க.. அப்புறம் பாருங்க..

lifestyle-health
By Nandhini Jan 31, 2022 09:14 AM GMT
Report

ஆலிவ் மரத்தின் விதைகளிலிருந்து உருவாக்கப்படுவதுதான் ஆலிவ் எண்ணெய். இந்த எண்ணெய்யில் முழுக்க முழுக்க கொழுப்பு மட்டுமே இருக்கும்.

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை வழங்குவதோடு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் போன்ற சரும பிரச்சனைகளுக்கு எதிராக போராடவும் செய்கிறது.

சருமத்திற்கு ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலின் போன்ற ஏராளமான ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் இருக்கின்றன.

இது சருமத்தின் வயதான செயல்முறையை துரிதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் தன்மையை பாதுகாக்கின்றன.

சருமம் பளபளக்க

ஆலிவ் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொண்டவை. இதனால், இதில் இயற்கையான மாய்சுரைசராக பயன்படுகிறது. சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவி செய்கிறது. சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்கும்.

கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போக்க

ஆலிவ் எண்ணெய் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளுக்கு இயற்கையான மருந்தாக பயன்படுகிறது. இது முகத்தில் திரட்டப்பட்ட அசுத்தங்களை உறிஞ்சுவதன் மூலம் துளைகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

காயங்களுக்கு

ஆலிவ் எண்ணெயை தவறாமல் தடவி, மசாஜ் செய்வதன் மூலம் வடுக்கள் மற்றும் பருக்களின் அடையாளங்களை மறைத்துவிடும்.

தோல்

ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ, ஃப்ளவனாய்டுகள் மற்றும் பாலிஃபினால்கள் சத்துக்கள் உள்ளன. இது சரும செல்களை மேம்படுத்துகிறது.

வீக்கம் குறைய

ஆலிவ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் வெளிப்புற மற்றும் உள் அழற்சிகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவி செய்கிறது. இதனால் வீக்கம் குறைகிறது.

ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தும் முறை -

  • ஆலிவ் எண்ணெய் - 1டீஸ்பூன்
  • வெந்நீர் - தேவைக்கு
  • மென்மையான பருத்தி துணி

ஆலிவ் எண்ணெய் விரலில் தொட்டு முகம் முழுக்க வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர், மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றிபகுதியில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். மென்மையான பருத்தி துணியை வெந்நீரில் நனைத்து அறைவெப்பநிலைக்கு வரும் வரை அந்த துணியை கொண்டு முகத்துக்கு எதிராக உறுதியாக அழுத்த வேண்டும்.

பிறகு துணியை அகற்றி சூடான நீரில் மீண்டும் முக்கி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்திய இடத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும். பிறகு உலர வைக்கவும். தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

வறண்ட சருமம் மென்மையாகும். சருமம் பளபளப்புடன் புத்துணர்ச்சியாக இருக்கும். எண்ணெய் சுரப்பு கட்டுக்குள் இருக்கும். துளைகள் சுத்தமாக அடைக்காமல் இருக்கும். முகம் ஜொலிக்கும்.