Wednesday, Jul 16, 2025

தினமும் கரும்பு ஜூஸ் குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்னு தெரியுமா?

lifestyle-health
By Nandhini 3 years ago
Report

கரும்பு இனிப்பு சுவை பலரையும் தன்பால் ஈர்க்கக்கூடியது. கரும்பிலிருந்து வெல்லம், சுத்திகரிப்படாத பழுப்பு சர்க்கரை போன்றவை தயாரிக்கப்படுகிறது.

இதன் சக்கையில் இருந்து எரிபொருள், காகிதம் மற்றும் ஒலி இன்சுலேடிங் போர்டுகளை உருவாக்க முடியும்.

இவ்வளவு நன்மைகளுக்கு உதவும் கரும்பில் சாற்றினை பருகுவதால் எவ்வளவு சத்துகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் -

  • கரும்பு சாறு ஊட்டசத்துகள் நிரம்பியது. ஒருவரை புத்துணர்ச்சியுடனும் இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. உடலில் டி.என்.ஏவில் ஏற்படும் சேதத்தை தடுத்து உடல் உறுப்புகளை பலப்படுத்துகிறது. கர்ப்பப்பை வலுப்பெறவும் கருசிதைவை தடுக்கவும் உதவுகிறது.
  • கரும்பு சாறு புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராட வல்லது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கரும்புசாறு கல்லீரலை பலப்படுத்துகிறது. பித்த அளவை சமநிலை படுத்துகிறது. உடலில் இழந்த புரதங்கள் மற்றும் விரைவாக மீட்க கூடிய ஊட்டச்சத்துக்களால் உடலை நிரப்புகிறது. 
  • கரும்பு சாறு சிறுநீரகங்களுக்கும் நல்லது.சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளை போக்குகிறது. அத்துடன் யுடிஐக்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • கரும்பு சாற்றில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்களும் உள்ளன.இவை வைட்டமின் ஏ, பி 1, மற்றும் சி ஆகியவற்றின் வளமான மூலங்கள் என்பதால் உடலுக்கு தேவையான ஊட்டசத்துகள் நிறைவாக கிடைக்கிறது.