அழகை கெடுக்கும் முகத்தில் உள்ள அழுக்கை போக்கணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

 நாம் தினமும் பல இடங்களுக்கு நடை பயணமாகவோ, பேரூந்துகளிலோ செல்கிறோம். இவ்வாறு நாம் வெளியில் செல்லும் போது, வெளியில் உள்ள தூசிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் நமது முகத்தில் ஒட்டிக் கொள்கிறது.

இதனால், முகத்தில் உள்ள சரும துளைகளில் இந்த அழுக்குகள் அப்படியே படிந்து விடுகிறது. இதனால் முகம் அழுக்காக மாறிவிடுகின்றது. இதனை போக்க அதிக பணத்தை தான் செலவு செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட சரி செய்யலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம் -

பாதாம் பொடி 

பாதாமை பொடி செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

உளுத்தம் பருப்பு

1/2 கப் உளுத்தம் பருப்பை நீரிடல் ஊற வைத்து அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் 15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பொலிவோடு காணப்படும். இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வர வேண்டும்.

அரிசி மாவு

அரிசி மாவை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி முகம் மற்றும் கை, கால்களிலும் தடவி ஸ்கரப் செய்தால், அழுக்குகள், இறந்த செல்கள் முழுவதும் வெளிவந்து, முகம் பிரகாசமாக இருக்கும். அரிசி மாவில் வைட்டமின் ஈ, கே மற்றும் பி6 உள்ளது. இது சோர்வடைந்து காணப்படும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.

பச்சை பயறு 

பச்சை பயறு சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும். பச்சை பயறை பொடி செய்து, அதில் தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.   

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்