உடல் எடையை குறைக்கும் அற்புத ஜூஸ் - ட்ரை பண்ணி பாருங்க.. அசந்துடுவீங்க
lifestyle-health
By Nandhini
உடல் எடையை குறைக்க எலுமிச்சைச் சாறு உதவி செய்கிறது. வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி உள்ளது.
அதில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்திருக்கின்றன.
வெள்ளரிக்காய் உட்கொள்வது சருமத்தை புத்துணர்வு கிடைக்கும். இவை இரண்டையுயும் கலந்து ஜூஸ் செய்து பருகினால் எடை பல மடங்கு வேகமாக குறையுமாம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளரி – 1
- எலுமிச்சை பழம் – 2
- தண்ணீர் – 4 டம்ளர்
- புதினா இலைகள் – ஒரு கைப்பிடி
செய்முறை
- வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போட வேண்டும்.
- புதினா இலைகளையும் தூவிக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருக வேண்டும்.
- நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.