சர்க்கரை நோயால் அவதியா? கவலை வேண்டாம்? இந்த பானத்தை அருந்தினாலே போதும்...

By Nandhini Jan 05, 2022 06:44 AM GMT
Report

மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை முறை மற்றும் பாலியல் ஹார்மோன்கள் ஆகியவற்றில் சிக்கல் இருந்தால் நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. ஆரம்ப கட்டத்தில் இதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வதால் பல பிரச்சனைகளை தடுக்கலாம்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர இந்த பானத்தை அருந்தினால் நோய் குணமாகும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வர

பெரிய நெல்லிக்காய் - 1

பாகற்காய் - சிறிதளவு

தண்ணீர் - சிறிதளவு

செய்முறை -

நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிவிட்டு, சிறு சிறு தண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

பாகற்காயையும் அவற்றின் விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

மிக்சியில் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய், பாகற்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

பின்பு, அரைத்த கலவையை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்து குணமாகும்.