பனிக்காலத்தில் அடிக்கடி தொண்டை வலிக்குதா? இதோ இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க.. வலி குறைந்துவிடும்

lifestyle-health
By Nandhini Dec 31, 2021 09:17 AM GMT
Report

 குளிர்காலமானது நமக்கு பல்வேறு பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்துவதாக உள்ளது. தொற்றுநோய்களுக்கான ஒரு காலமாக குளிர்காலம் உள்ளது. அதிகமான குளிரின் காரணமாகத் தொண்டை தொடர்பான பிரச்சனைகளை நாம் அனுபவிப்பதற்கான வாய்ப்புள்ளது எனவே இந்த சமயத்தில் நமது ஆரோக்கியத்தின் மீது நாம் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

பனிக்காலத்தில் தொண்டை பிரச்சினையிலிருந்து எப்படி தற்கொள்வது என்பதைப் பற்றி பார்ப்போம் -

சுவாச சுகாதாரத்தைப் பராமரித்தல்

பனிக்காலத்தில் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதனால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும். மேலும் நோய்த் தொற்று உள்ளவர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்க வேண்டும். அப்போதுதான், பாக்டீரியா தொற்று ஏற்படுவதைக் குறைக்க முடியும். தினசரி உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.

​வாய் கொப்பளித்தல்

வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். இதனால், தொண்டை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராகும். தொண்டை தொடர்பான நோய்த்தொற்றுகளைச் சரி செய்ய இந்த முறை உதவி செய்யும்.

​நீராவி

சுடுநீரில் துளசியை சேர்த்து அதன் நீராவியை பிடித்தால், நமது தொண்டைக்கு நன்மை செய்யும். மேலும், நாசி தொடர்பான பிரச்சனைகளை இது சரி செய்ய உதவி செய்யும். ​சூடான பானம் வெதுவெதுப்பான பானங்களை உட்கொள்ளும்போது அது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். தொண்டை மற்றும் நாசி தொடர்பான பிரச்சனைகளுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

​புகைப்பிடித்தல், மது அருந்துதல்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் குளிர்காலங்களில் இவை சுவாசப்பகுதியில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன. எனவே, நீங்கள் மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய பழக்கங்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது.