உடல் எடையை கிடுகிடுவென குறைக்க ஆசையா? அப்போ இதை காலையில குடியுங்கள் போதும்..!

weight loss lifestyle-health
By Nandhini Dec 28, 2021 09:14 AM GMT
Report

பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலையில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது.

அந்தவகையில் உடல் எடையை குறைக்க ஒரு சில இயற்கை பானங்கள் காலையில் குடித்து வந்தால் இன்னும் நல்ல பயனை பெறலாம்.

தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

காபி

உடல் எடையை குறைக்கும் போது சர்க்கரை இல்லாத கருப்பு காபியை மட்டும் சாப்பிடுங்கள். ஒரு கப் காபியில் சர்க்கரை மற்றும் பாலைச் சேர்ப்பது உங்கள் தினசரி உணவுத் திட்டத்தைச் சிதைக்கும் கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கும்.

கிரீன் டீ 

கிரீன் டீ அருந்தலாம். இந்த பானம் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, உடற்பயிற்சியின் போது உங்கள் செயல்திறனையும்
அதிகரிக்கும்.

எலுமிச்சை மற்றும் புதினா

எலுமிச்சை மற்றும் புதினா அல்லது இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள் சேர்ந்து அருந்தலாம். இந்த அனைத்து உணவுப் பொருட்களும் கொழுப்பை எரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கவும் மற்றும் நீரிழப்பைத் தடுக்கவும் உதவும்.

காய்கறி, பழங்கள்

நீங்கள் காய்கறிகளையும் பழங்களையும் கலந்து காலையில் ஒரு கிளாஸ் சாறு குடிப்பது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும். அடுத்த உணவு வரை உங்களை முழுமையாக வைத்திருக்கவும் உதவும்.

ஸ்மூத்தி

சில பழங்கள் மற்றும் நட்ஸ்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஸ்மூத்தி ஒரு முழுமையான காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.