அடேங்கப்பா... இந்த பொருளை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலியே வராதாம்!
எள் (Sesame) உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. தினந்தோறும் நாம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
அதனை விரைவிலேயே நம்மால் உணர்வும் முடியும். தினமும் எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும். அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.
எள்ளின் இலை, பூ, காய், விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. கருப்பு எள், வெள்ளை எள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளை வெள்ளை நிற எள்ளில் இரும்புச்சத்தும் கருப்பு நிற எள்ளில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும்.
எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
மூட்டு வலிக்கு
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.
எலும்பு பிரச்சினைக்கு
எள்ளு விதைகளில் உள்ள ஜிங்க் சத்து எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
இருதய நோய்க்கு
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய (Heart) சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. கழிவுகள் வெளியேற்ற தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
தலைமுடிக்கு
தலைமுடி மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல், உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது. எள் உருண்டையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறையும். முடிகள் நல்ல பளபளப்பை பெரும்.
மூலநோய்க்கு
எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து அதனை நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.
சொறி சிரங்கு
சரியாக எள்ளு விதையை அரைத்து சொறி சிரங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் படிப்படியாக குறையும்.
அதிக சத்துக்கள் கிடைக்க
எள்ளை நீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து குடிக்க வேண்டும். ஏனெனில் இதில் விட்டமின் B1, B2, B3, B5, B6 மற்றும் C போன்ற அனைத்து சத்துக்களும் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது.