அடிக்கடி கிறுகிறுவென்று தலை சுற்றுகிறதா? கவலை வேண்டாம் - இதை ட்ரை பண்ணுங்க

lifestyle-health
By Nandhini Dec 15, 2021 10:07 AM GMT
Report

 மயக்கம் என்றால் என்ன?

அடிக்கடி மயக்கம் வருது இதற்கு காரணம் என்ன என்று கேட்டால், சிலர் உடம்பில் தேவையான சத்து இல்லை என்று சொல்வார்கள். உண்மையான காரணம் அது கிடையாது. உடம்பில் அதிகப்படியான பித்தம் இருந்தால் இந்த மயக்கம் ஏற்படும்.

ஒருவருக்கு மயக்கம் ஏற்படுகிறது என்றால் அதற்கு பலகாரணங்கள் இருக்கும். மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு இரண்டுமே மூளையுடன் தொடர்புடையது. கிறுகிறுப்பு மற்றும் மயக்கம் இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று கூறலாம்.

வழக்கமான சூழலில் இருந்து உங்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்றோ அல்லது தரையில் சாய்வது போன்றோ ஒருவிதமான பாதிப்புகளை இந்த கிறுகிறுப்பு ஏற்படுத்துகிறது. தீவிரமான கிறுகிறுப்பையே மயக்கம் என்று சொல்லலாம்.

அறிகுறிகள்:

  • லேசான தலை சுற்றல்
  • மயக்கம்
  • தூக்கமின்மை
  • படபடப்பு
  • தலைவலி

டிவி, மொபைல்

'டிவி' பார்ப்பது, புத்தகம் படிப்பது, மொபைல் போன் பயன்படுத்துவது என்று எதையும் படுத்தபடி செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், தலைசுற்றல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இரத்த அழுத்தம் குறையும் போது

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போதும் மயக்கம் ஏற்படும். நாம் அதிக நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, நம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்துவிடும். அப்போது மயக்கம் ஏற்படும். அந்த சமயத்தில் உப்பு அல்லது உப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏன்னெனில் உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.

வெயிலினால் தலை சுற்றல்

வெளியே நீண்ட நேரம் வெயிலில் செல்லும் போது, சூரியன் உடலில் இருக்கும் சக்தியை (எனர்ஜி) உறிஞ்சிவிடும். அதாவது உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்களை சூரியன் உறிஞ்சிவிடுவதால், உடலில் அப்போது ஒருவித பதட்டம் ஏற்படுவது போல் ஏற்படும் சில நேரங்களில் அதுவே மயக்கமாக மாறிவிடும். எனவே எப்போதும் வெளியே செல்லும் போது, எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை மற்றும் உப்பை கலந்து குடிக்க வேண்டும். இதனால் மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.

தலை சுற்றல் ஏற்படும் போது சாப்பிட வேண்டியவை:

1. துவர்ப்பு சுவையுள்ள உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2. தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே நல்ல பலன் கிட்டும்.

3. கசகசா, கொத்த மல்லி ஆகியவற்றை பொடிசெய்து சாப்பிட்டால் தலை சுற்றல் சரியாகும்.

வாயு முத்திரை :

ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்துக் கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.