குழந்தைப்பேறு பெற.. மலட்டுத் தன்மை நீங்க.. இந்த பொருள் சாப்பிட்டு வந்தாலே போதுமாம்!

lifestyle-health
By Nandhini Dec 14, 2021 10:04 AM GMT
Report
141 Shares

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

ஒரு சில தாவரங்களின் ஒரு சில பகுதிகள் மட்டுமே மனிதர்கள் உணவாக பயன்படுத்தக்கதாக இருக்கின்றன. மற்ற சில தாவரங்களில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கின்றன.

அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவ மூலிகை மரமாக முருங்கை மரம் இருக்கிறது. அந்த முருங்கை மரத்தின் இலைகள் முருங்கை கீரை என அழைக்கப்படுகின்றன.

முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் செல்களில் சேதத்தை தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்களை கட்டுப்படுத்துகிறது. உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் உதவுகிறது.

குழந்தைப்பேறு பெற.. மலட்டுத் தன்மை நீங்க.. இந்த பொருள் சாப்பிட்டு வந்தாலே போதுமாம்! | Lifestyle Health

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை எந்த ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உடலில் எந்தவிதமான குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் குழந்தை பிறப்பதில் தடையேதும் இருக்காது. தற்காலங்களில் சத்தில்லாத மற்றும் கலப்படங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. ஆண், பெண் இரு பாலர்களும் முருங்கை இலைகளை வேக வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கி குழந்தை பிறக்க வழி வகை செய்யும்.

கண் பார்வைக்கு

கண் பார்வைக்கு 100 கிராம் முருங்கை கீரை தினமும் உண்டு வந்தால் கண் பார்வை கூர்மையாக இருக்கும், கண் பார்வை குறைபாடும் ஏற்படாது.

இரத்த சோகை தடுக்க

முருங்கை கீரையில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. இது உடம்பில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இரத்த சோகை போன்ற நோய் எற்படாமல் தடுக்க உதவுகின்றது. முருங்கை இலைகளில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து, தாமிரம் ஆகியவை இருக்கின்றன. முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், உடம்பில் இரத்த சோகை குறையும்.

மலச்சிக்கலை தடுக்க

முருங்கைகீரையில் அதிக அளவில் நார்சத்து இருக்கிறது. முருங்கை கீரையை வேக வைத்து அதன் சாற்றை பருகி வந்தால் உடல் சூடு குறையும். மேலும் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் மற்றும் குடல் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை உருவாக்காமல் தடுக்கும்.

இரும்புச் சத்து

உடலுக்கு இரும்புச் சத்து என்பது மிக மிக முக்கியம். அடிக்கடி முருங்கை கீரையை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை அளிக்கிறது. குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.

தாய்ப்பால் சுரக்க

உதவும் குழந்தை பிறந்து 6 மாதம் வரைக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் உணவு. தாய்மார்கள் முருங்கை கீரையை பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

கொழுப்பைக் குறைக்க

முருங்கை கீரை அதிக கொழுப்புக்கு எதிரான சிறந்த தீர்வாகும். கொலஸ்ட்ரால் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. முருங்கை கீரைகள் சாப்பிடுவது அதிக கொழுப்பு அளவுகளுக்கு எதிராக செயல்படுவதாக அறியப்படுகிறது.