உடல் எடை, சர்க்கரை அளவை கிடுகிடுவென குறைக்க வேண்டுமா? அப்போ.. இதை தினமும் ஊற வைத்து குடித்து வாங்க..

lifestyle-health
By Nandhini Dec 13, 2021 11:54 AM GMT
Report
506 Shares

திருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது.

உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம்.

சப்ஜா விதையினை இரவில் ஊறவைத்து விட்டு மறு நாள் கூட பயன்படுத்தலாம். ஊறிய பின்பு பார்த்தால் ஜவ்வரிசி போன்றே இருக்கும்.

ஊற வைத்த சப்ஜா விதையினை ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் ஷேக், பால், தண்ணீர் இவற்றில் எதில் வேண்டுமானாலும் சேர்த்து குடித்து வரலாம்.

சப்ஜா விதைகளில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கார்ப்ஸ் போன்றவை உள்ளன, மேலும் அவை நார்ச்சத்து நிறைந்தவை. ஆச்சரியம் என்னவென்றால், அவற்றில் கலோரிகள் இல்லை. 1 ஸ்பூன் சப்ஜா விதையில் 2 முதல் 4% கலோரிகள் மட்டுமே உள்ளது.

உடல் எடை, சர்க்கரை அளவை கிடுகிடுவென குறைக்க வேண்டுமா? அப்போ.. இதை தினமும் ஊற வைத்து குடித்து வாங்க.. | Lifestyle Health

எடையை குறைக்க

தினமும் காலையில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால், சப்சா விதைகளில் உள்ள நார்ச்சத்து, உங்களை நீண்ட நேரம் உற்சாகமாக வைத்திருக்கின்றன, தேவையற்ற பசிகளைத் தடுக்கின்றன, எடை குறைக்க உதவி செய்கின்றன.

தொப்பை குறைக்க

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வர உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதுடன் தொப்பையும் குறையும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சப்ஜா விதை குணப்படுத்தும்.

மலச்சிக்கலை போக்க

மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.

உடல் சூட்டை குறைக்க

இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டு வரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.

மூல நோய் குணமாக

மூல நோயினால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோய் பிரச்சனை விரைவில் குணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற இது உதவும்.

வயிற்றுப் புண் குணமாக

அல்சர் என்று சொல்லப்படுகிற வயிற்றுப் புண் வந்தால் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படும். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசியே இருக்காது. கொஞ்சம் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும். இப்படி பிரச்சினை உள்ளவர்கள் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் குணமாகலாம்.

சக்கரையின் அளவை குறைக்க 

சக்கரையின் அளவை குறைக்கும் உடலில் சக்கரையின் அளவை குறைக்க விரும்புவோர் தினமும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர உடலில் சக்கரையின் அளவு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

சப்ஜா விதையை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதுமட்டுமின்றி உடலுக்கு புத்துணர்ச்சியையும் கிடைக்கும்.