எலும்பு தேய்மானத்தை தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்...
வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைப்பாடால், எலும்புகள் பலவீனமாகின்றன.
ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு தேவையான அளவு கல்சியம், வைட்டமின் டி சத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும். நம்முடைய உடலில் எந்த ஒரு தாது உப்பைக் காட்டிலும் அதிக அளவில் இருப்பது கால்சியம்தான்.
எலும்பு, பற்கள், இதய நலம், தசைகள் செயல்பாடு, நரம்பு மண்டல சிக்னல் பரிமாற்றம் என கால்சியத்தின் தேவை அதிக அளவில் உள்ளது.
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
பால்
மிக எளிதில் கால்சியம் கிடைக்கும் உணவு பால்தான். ஒரு கப் பாலில் 276 முதல் 352 மிகி அளவுக்கு பால் உள்ளது. நன்கு கிரகிக்கப்படும் நிலையில் இந்த கால்சியம் உள்ளது. எனவே, தினமும் 2 கப் பால் எடுத்துக்கொள்வதன் மூலம் ஓரளவுக்கு கால்சியம் தேவையைச் சமாளிக்கலாம்.
தயிர்
தயிர், யோகர்ட் போன்ற பால் பொருட்களில் கால்சியம் சத்தும் நல்ல பாக்டீரியாவும் அதிக அளவில் உள்ளன. ஒரு கப் தயிரில் ஒரு நாளைக்குத் தேவையானதில் 30 சதவிகிதம் அளவுக்கு கால்சியம் கிடைத்துவிடுகிறது.
பயிறு வகைகள்
பயிறு, பருப்பு வகைகளில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் நல்ல புரதமும் உள்ளது. துத்தநாகம், ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே, பயிறு, கொண்டைக்கடலை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
ஆட்டுக்கால் சூப்
ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கல்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம்.
முட்டை
உடலுக்கு தேவையான சத்துக்களை முட்டை வழங்குகின்றது. உடலுக்கு தினசரி தேவையான 6% வைட்டமின் சத்து முட்டையில் உள்ளது.
கீரைகள்
கீரைகளில் வெந்தயக் கீரை, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை, வெங்காயத்தாள் ஆகியவற்றில் கல்சியம் உள்ளது.
You May Like This