உடல் எடையை குறைக்க, இதை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?
நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் பருப்பு வகைகளில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நம் அன்றாட உணவில் சிறிதளவு பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதில் பருப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக பச்சை பயிறு பாசிப்பருப்பு திகழ்கிறது.
பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் 3 முறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம். இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் லிக்னோ ரேடியேட்டா என்பதாகும். லெகூமினேசியே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.
சரும புற்றுநோய்
இன்றைய நடைமுறையில் நம் சருமத்தினை அழகான தோற்றத்துடன் காட்சி அளிப்பதற்காக நாம் பல ரசாயனம் கலந்த திரவங்களை பயன்படுத்துகிறோம். இதனால் நாளடைவில் சரும புற்றுநோய் உண்டாகிறது. எனவே தினமும் நாம் சிறிதளவு பச்சை பயரினை அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வருவதன் மூலமாக சரும புற்றுநோய் ஏற்படுவதைத் முற்றிலுமாக தடுக்கலாம்.
இரும்புச்சத்து
இன்றைய காலகட்டத்தில் மக்கள் உண்ணும் உணவு வகையின் காரணமாக பெரும்பாலானோர் பெரும் பிரச்சினைகள் அவதிப்படுகின்றனர் அதில் மிகவும் முக்கியமான ஒன்று இரும்புச்சத்து குறைபாடு. பச்சை பயிறு அன்றாட வாழ்வில் சிறிதளவு சேர்த்துக் கொண்டு வரும்போது அதில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைக்கிறது மற்றும் இரத்த சோகையில் இருந்து தப்பிக்கலாம்.
உடல் எடையை குறைக்க
வாரத்திற்கு 3 முறை பச்சைப் பயிறு சாப்பிட்டு வந்தால், உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
வாய்வை நீக்க
பச்சைப்பயிறு சாப்பிட்டு வந்தால், குளிர்ச்சியை உண்டாக்கும் குணமும் இதற்கு உண்டு ஆனால் வாய்வுத்தொல்லை உண்டாக்கி விடும். எனவே இதனை வேக வைக்கும்போது வாய்வை நீக்கும் .
முடி வளர்ச்சிக்கு
பச்சைப் பயிறு சாப்பிட்டு வந்தால், பச்சைப் பயிற்றில் ஒமேகா அமிலம் அதிக அளவில் இருப்பதனால், இது முடி வளர்ச்சியை தூண்டி, நல்ல ஆரோக்யமாக முடியை பெற உதவுகிறது.
ஹார்மோன் சரியான விகிதத்தில் சுரக்க
பச்சைப் பயிறு சாப்பிட்டு வந்தால், பச்சைப் பயிற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், ஹார்மோன் சுரப்பிகளை தூண்டி, ஹார்மோன் சரியான விகிதத்தில் சுரக்க வழிவகை செய்கிறது. மேலும் புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது.
சர்க்கரை நோய்
பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.