தப்பித்தவறி கூட மழைக்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் சாப்பிடாதீங்க!

lifestyle-health
By Nandhini Dec 01, 2021 10:41 AM GMT
Report

பொதுவாக மழைக்காலத்தில் நோய்த் தொற்றுகள் எளிதில் பரவ கூடும். ஏனெனில் பருவ மாற்றத்தால் உடல் நலக் குறைவு, சளி போன்ற பிரச்னைகளும் வரும்.

இவற்றைத் தடுக்க முடிந்த அளவு உடலைப் பராமரிப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக உணவுகள் மூலமும் நோய்த் தொற்று வெகுவாகப் பரவும் என்பதால் உணவில் கவனமாக இருப்பது அவசியம். ஒரு குறிப்பிட்ட உணவுகளை மழைக்காலங்களில் தவிர்ப்பது நல்லது.

தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்

  • நீண்ட நேரம் வெளியே வைத்த உணவுகள், தெருக்களில் விற்கும் பழங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும்.
  • மழைக்காலங்களில் எண்ணெய்யில் பொறித்த சூடான உணவுகளை சாப்பிட கூடாது. ஏனெனில் மழைக்காலத்தில் ஜீரண சக்தி மிகக் குறைவாக இருக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல், வயிறு மந்தத் தன்மை , வயிறு கோளாறு போன்ற உபாதைகளை சந்திக்க நேரிடும்.
  • கடல் சார் உணவுகளை மழைக்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மழைக்காலம்தான் கடல் உயிரினங்களுக்கு இனப்பெருக்கக் காலம். அப்போது அவற்றின் வயிற்றில் முட்டைகள் இருக்கும். அவற்றை சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படும் அல்லது அவை விஷமாகவும் மாறலாம்.
  • மழைக்காலத்தில் கீரைகள் உண்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.ஏனெனில் அவை மண்ணில் விளைவதால் கிருமிகள் இலைகளில் தொற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும். அவற்றை உண்பது உடலுக்குக் கேடு.
  • காளான் மழைக்காலத்தில் உண்பது சரியல்ல. காரணம் மழைக்காலத்தில் காளானை பாக்டீரியாக்கள் வெகுவாகத் தாக்கும். அவற்றை என்னதான் சுத்தம் செய்து சாப்பிட்டாலும் அந்த பாக்டீரியாக்கள் தாக்கும் ஆற்றல் கொண்டது.

தப்பித்தவறி கூட மழைக்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் சாப்பிடாதீங்க! | Lifestyle Health