வயிற்றுப் புண், வயிற்று நோய்களை குணப்படுத்தும் வெந்தய கீரை கூட்டு

Stomach ulcer Stomach disease lifestyle-health
By Nandhini Nov 27, 2021 08:49 AM GMT
Report

வெந்தயக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும்.உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன.

மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.

வெந்தயக் கீரை கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம் -

தேவையான பொருட்கள்

  • வெந்தய கீரை – 2 கப்
  • பாசி பருப்பு – 3 மேஜைக்கரண்டி
  • தேங்காய் – 1/2 கப்
  • சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப
  • சக்கரை – 1/4 தேக்கரண்டி
  • அரிசி மாவு – 1/4 தேக்கரண்டி

தாளிக்க -

  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • ஜீரகம் – 1 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 4

வயிற்றுப் புண், வயிற்று நோய்களை குணப்படுத்தும் வெந்தய கீரை கூட்டு | Lifestyle Health

செய்முறை -

  • பாசி பருப்பை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
  • தேங்காயில் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். வெந்தயக் கீரையுடன், அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில், தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து, அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்க வேண்டும்.
  • சுவையான வெந்தயக் கீரை கூட்டு ரெடி. அறவே கசப்புத்தன்மை தெரியாது.