தலைவலி படாய் படுத்துகிறதா? இதோ பாட்டி வைத்தியம்

lifestyle-health
By Nandhini Nov 25, 2021 10:56 AM GMT
Report

தலைவலியை அனுபவிக்காத வர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பொதுவான விஷயம் இது. மற்ற வயதினரை விட 15 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கே தலைவலி அதிகம் வருகிறது. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி அதிகம். அதிக வேலை, சரியான துாக்கம் இல்லாமல் இருப்பது போன்றவற்றால் வருவது தலை பாரமாக இருக்கும். இதற்காக அடிக்கடி மாத்திரைகளை போட வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை வைத்து கூட எளியமுறையில் இதனை போக்க முடியும் தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • உருளைக் கிழங்கை துண்டாக்கி, நெற்றியில் தேய்க்கவும் அல்லது அதனை அரைத்து தலையில் பற்று போல் இடுங்கள். சில நிமிடங்களில் தலை வலி மறைந்து போகும்.
  • ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து இஞ்சியை நசுக்கி அதில் போடுங்கள். 10 நிமிடம் நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அதனை இறக்கி எலுமிச்சை சாறு சில துளிகள் பிழிந்து, அதனை வெதுவெதுப்பாக பருகவும். வலி சட்டென விட்டுவிடும்.
  • சுக்கு ஒரு துண்டு எடுத்து நீர் விட்டு அரைத்து தலையில் பற்று இடுங்கள். தலைவலி குணமாகிவிடும் உங்கள் உடலில் தேவையான அளவு நீரில்லாதபோது சூடேறி தலைவலி உண்டாகும். உடனே சில டம்ளர் நீர் குடித்து பாருங்கள்.
  • முட்டைக் கோஸ் இலையை நீர் விடாமல் அரைத்து அதனை தலையில் பற்று இடவும். அதன் சற்றினை நெற்றியில் தடவவும்.
  • பால் கலக்காத வரகாபியில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.   

தலைவலி படாய் படுத்துகிறதா? இதோ பாட்டி வைத்தியம் | Lifestyle Health