பட்டுபோல் முகம் மின்ன வேண்டுமா? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க

2 months ago

பொதுவாக இளமைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு எப்போதும் சருமம் பளபளப்பாக ஒளிர வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால் சிலருக்க அவர்கள் நினைத்தால் போல் முகம் அவ்வளவு பளபளப்பாக இருக்காது.

அவர்கள் ஆரஞ்சு தோலை சருமத்தில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தை விட அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. பிரகாசமான மற்றும் பளபளப்பான சருமத்துக்கு உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆரஞ்சு தோலில் உள்ளன.

இந்த ஆரஞ்சு தோலை பேஸ்பேக்காக பயன்படுத்துவதால் தெளிவான மற்றும் பிரகாசமான சருமத்தைப் பெற முடியும். ஆரஞ்சு தோலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்தை போக்க உதவும். அந்தவகையில் தற்போது இவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம் -

  • ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோலின் தூள் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாகக் கலக்கி உங்களின் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இந்த பேஸ்பேக்கை நீங்கள் உங்களது முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெறலாம். இந்த பேஸ்பேக் உங்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும்.
  • ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோல் தூள் உடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் இயற்கையான தேனை எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி நன்றாக பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 5 முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகு ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள்.
  • ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் 1 டீஸ்பூன் சந்தனத் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் வால்நட் பொடியினை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் 2 அல்லது 3 சொட்டு எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 5 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். காய்ந்த உடன் அதனை முகத்தில் இருந்து நீக்கி விடுங்கள். இந்த பேஸ் பேக் உங்களுக்கு பளபளப்பான சருமத்தைப் பெறவும், உடனடி பளபளப்பைக் கொடுக்கவும் உதவும்.
  • ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோல் தூள், 1 டீஸ்பூன் முல்தானி மட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் அந்தக் கலவை உலர்ந்தவுடன் அதனை கழுவி விடவும். இந்த பேஸ்பேக் உங்களின் சருமத்தை சுத்தப்படுத்தி, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் ஒயிட்கெட்ஸை வெளியேற்ற உதவும்.
  • ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் சந்தனப் பொடியைச் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் நீங்கள், பிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற முடியும். எண்ணெய் சருமம் மற்றும் முகப்பரு உள்ளவர்களுக்கு இது சிறந்த பேஸ் பேக்காக இருக்கும்.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்