காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மை எவ்வளவு தெரியுமா? பாருங்க...

By Nandhini Nov 01, 2021 10:32 AM GMT
Report

தண்ணீர் என்பது தாகத்தை தணிப்பதற்கு மட்டும் குடிப்பது அல்ல. இந்த தண்ணீரை முறையாக குடித்துவந்தால் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகள் தீரும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது. இந்த உலகத்தில் அதிக சுறுசுறுப்பை கொண்ட நாடு என்றால் அது ஜப்பான். ஜப்பானியர்கள் எப்படி சுறுசுறுப்பாக செயல்படுகிறார் என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? தினந்தோறும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அவர்கள் குடிக்கும் 2 டம்ளர் தண்ணீர் தான் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க காரணம்.

பொதுவாக காலையில் எழுத்தது சிலர் தண்ணீர் அருந்துவார்கள், சில பெட்காபி அருந்துவார்கள். ஆனால், காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக தண்ணீர் அருந்துவதுதான் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வரும்போது கண்டிப்பாக தண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் உடலில் வைரஸ், பாக்டீரியாக் கள் உள்ளிட்ட நோய் தொற்றுகள் இருந்தால் அவற்றின் வீரியம் குறைந்துவிடும்.

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் எந்த கெடுதலும் வராது. உடல் நன்மைதான் அதிகமாகும். சிலர் சொல்லுவது போன்று சிறுநீரகம் எல்லாம் பாதிக்காது. தண்ணீர் குடிக்காமல் இருந்தால்தான் பாதிக்கும். நாம் குடிக்கும் நீர் வயிற்றிலேயே சுத்திகரிக்கப்பட்டு விடும். பிறகுதான் சிறுநீரகம் செல்லும். சிலர் சொல்லுவது போல நேராக செல்லாது. நம் உடலியல் அமைப்பு ஒரு அழகான வடிவைப்பு.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் 

குடலை சுத்தப்படுத்த

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நம்முடைய குடல் சுத்தம் செய்யப்படுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை காலை கடனில் வெளியேற்றி விட்டோமேயானால் உடல் ஆரோக்கியம் பெறும்.

உடல் எடை குறைய

தூங்கி எழுந்ததும், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் பசியின் அளவைக் குறைத்து, அதிக அளவு உடல் பருமன் ஏற்படுவதைக் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், நமது உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நிணநீர் மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.

மலச்சிக்கலை தடுக்க

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், குடல் இயக்க செயல்பாட்டை சீராக்கி. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.

சருமத்திற்கு

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், முகத்தில் எந்த ஒரு முகப்பருவும் ஏற்படுவதை தடுக்கும். அதிகப்படியான தண்ணீர் குடிப்பதன் மூலம் நம்முடைய தோலும் மென்மையாக இருக்கும்.

அல்சர்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், குடல்புண் என்று சொல்லப்படும் அல்சர் தடுக்கப்படுகிறது. காலையில் உணவு அருந்தாமல் இருப்பவர்களுக்கு கூட, வெறும் தண்ணீர் மட்டுமாவது குடித்துக் கொள்ளுங்கள். அல்சர் வராமல் தடுக்க முடியும்.

ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை ஆக்சிஜன் அதிகப்படியாக கிடைப்பதன் மூலம் நம்முடைய உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்.