மாதவிடாய் காலங்களில் மென்சுரல் கப் பயன்படுத்து நல்லதா? கெட்டதா? பார்ப்போம்

lifestyle-health
By Nandhini Oct 31, 2021 10:02 AM GMT
Report

மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை அப்புறப்படுத்த ஆரம்ப காலங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின் காட்டன் பஞ்சுகள் நிரப்பப்பட்ட நாப்கின்கள் புழக்கத்துக்கு வந்தன.

துணி மற்றும் நாப்கின் நம்முடைய உடல் உறுப்பின் வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடியவை. ஆனால், மென்சுரல் கப் என்பது பெண்களின் பிறப்புறப்பின் உள்ளே வைத்துப் பயன்படுத்தக்கூடியது.

கூம்பு வடிவத்தில், சிலிகான் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதை, மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளலாம். மாதவிடாய் நேரத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றம், அரிப்பு, நாப்கின்களால் உண்டாகும் அலர்ஜி போன்றவை வராது என்பதுதான் மென்சுரல் கப்பின் ப்ளஸ் (Menstrual Cup). மென்சுரல் கப் (Menstrual Cup) உடலுக்குள் சென்றுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற வதந்தியை நம்ப வேண்டாம். கப்பில் உள்ள அழுத்தம் நாம் பொருத்திய இடத்தை விட்டு நகரவிடாது என்பதால் வீண் பயம் வேண்டாம்.

அதேபோல, கப்பில் சேகரிக்கப் படும் ரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்றுவிடும் என்ற வதந்தியை யும் நம்ப வேண்டாம். மென்சுரல் கப் (Menstrual Cup) கால மாற்றம் மட்டுமல்ல, பாதுகாப்பான மாற்றமும் கூட இந்த மென்சுரல் கப் (Menstruation) விலை 2000 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த கப்பை நீங்க ஒரு முறை வாங்கிட்டா சுமார் 10 வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்.

மாதவிடாய் காலங்களில் மென்சுரல் கப் பயன்படுத்து நல்லதா? கெட்டதா? பார்ப்போம் | Lifestyle Health

மென்சுரல் கப் :

  • சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட மென்சுரல் கப்பானது மாதவிடாய் நேரத்தில் பெண்கள் நாப்கினுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை கப்.
  • இந்த மென்சுரல் கப்-பை பயன்படுத்தும் பொது 4 முதல் 12 மணி நேரத்திற்குள் அகற்றி அதை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

மென்சுரல் கப் பயன்கள்:

  • நாப்கினால் சுற்றுச்சூழல் மாசடைய வாய்ப்புள்ளது. ஆனால், இந்த மென்சுரல்-கப் பயன்படுத்துவதால் நிச்சயம் சுகாதாரக் கேடு ஏற்படாது.
  • மழையில் நனையும் போது நாப்கின் நனைந்துவிடுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருக்கும். ஆனால், இந்த கப்பை பயன்படுத்துவதால் அப்பாடி பயப்படவும் தேவை இல்லை.

மென்சுரல் கப்பால் ஏற்படும் பக்கவிளைவுகள்

  • சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்த நினைப்பவர்கள் முன்கூட்டியே மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
  • சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று ஏற்படும்.
  • இந்த மென்சுரல் கப் பெண்களின் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படாத பட்சத்தில் கண்டிப்பாக இது பயனுள்ளதாக இருக்கும்.