தினமும் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?

lifestyle-health
By Nandhini Oct 30, 2021 10:09 AM GMT
Report

பண்டைய மற்றும் நவீன வரலாறு மூலம் பூண்டு ஒரு முக்கிய மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், பல் வலி, மலச்சிக்கல் மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு நிவாரணியாக பூண்டு பயன்படுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. பூண்டில் அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்சைடு ஆகியவை நிறைந்திருக்கிறது.

இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் தன்மை இருப்பதால் உடல் இன்சுலின் சுரப்பிற்கு சரியாக எதிர்வினையாற்றும். தொடர்ச்சியாக பூண்டு உட்கொண்டு வந்தால் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்கும் ஹோமோசிஸ்டின் என்னும் அமினோ அமிலத்தை குறைக்கும். குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பூண்டை எப்படி சாப்பிடுவது?

இரண்டு பல் பூண்டுகளை எடுத்து அவற்றின் தோலை உரித்து அவற்றை நசுக்கவும். பின்பு அவற்றை காலை வெறும் வயிற்றில் உண்ணவும். அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும் செரிமான சக்திக்கு தினமும் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆரோக்கிய நன்மைகளை உற்பத்தி செய்யும் கந்தக கலவைகள் அதிகமாக உருவாகின்றன. இந்த கலவை உடலில் செரிமான சக்தியை அதிகரிப்பதுடன் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

இதயத்திற்கு

தினமும் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நெஞ்சி வலி மற்றும் தனமித் துடிப்பு போன்ற இதய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பு குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

குடற்புழுக்கள் வெளியேற

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.

வயிற்றுப் பிரச்சினைக்கு

தினமும் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.

வாயுத்தொல்லை நீங்க

தினமும் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வாயுத்தொல்லைகளை நீக்குவதில் பூண்டு மிகவும் சிறந்தது. தினசரி ஒரு பூண்டை, தீயில் சுட்டு, மென்று வந்தால் வாயுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.     

தினமும் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? | Lifestyle Health