வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் குடம் புளி ஜூஸ்!

lifestyle-health
By Nandhini Oct 21, 2021 06:35 AM GMT
Report

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குடம் புளி அதிகமாக விளைகின்றது. இந்த குடம் புளியை கேரள மக்கள் மீன் குழம்பு, ரசம் என சமையலில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

சாதாரணமாக பயன்படுத்தும் புளியை விட, இந்த குடம் புளி மிகவும் கடினமாக, சிவப்பு நிறத்தில் இருக்கும். உடல் எடையைக் குறைப்பதற்கும், செரிமான பிரச்னைகளை சரிசெய்வதற்கும் குடம் புளியில் மருத்துவப் பலன்கள் அதிகமாக உள்ளது.

இந்த குடம் புளி குறித்து ஆயுர்வேத மருத்துவத்தில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 22 ஆண்டுகளாக ஐரோப்பாவில் அதிக அளவில் குடம் புளி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் குடம் புளி ஜூஸ்! | Lifestyle Health

வயிற்றில் கெட்ட கொழுப்பை கரைக்க இதோ குடம் புளி ஜூஸ் - எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்

குடம் புளி - 100 கிராம்

வெல்லப்பாகு - கால் கிலோ

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

கறுப்பு உறுப்பு - தேவையான அளவு

தயாரிக்கும் முறை -

100 கிராம் புளியை 2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை மிக்சியில் நன்கு அரைக்க வேண்டும்.

அத்துடன் கால் கிலோ வெல்லப் பாகு, ஒரு டீ ஸ்பூன் மிளகு, சீரகம், கறுப்பு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ள வேண்டும்.

இந்தச் சாறை, ஒரு டம்ளர் நீருடன், ஒரு ஸ்பூன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் கிடுகிடுவென உடல் எடை குறைந்து விடும்.