தீராத சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும் வெற்றிலை சூப் - எப்படி செய்வது என்று பாருங்க...

lifestyle-health
By Nandhini Oct 15, 2021 09:25 AM GMT
Report

பழங்காலத்தில் உடல், மனதை ஆரோக்கியமாக வைக்க பல்வேறு யுக்திகளை நம் ம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் கண்டிப்பாக ஆயிரம் நன்மைகள் இருக்கும்.

நம் முன்னோர்கள் மிக கொடிய நோய் நொடிகள் எதுவுமின்றி வாழ காரணம். அவர்களது உணவு மற்றும் உபயோகிக்க உடல் பயிற்சிகள் பயன்படுத்தி வந்தனர். மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக பயன்படுத்தி வந்தனர். வெற்றிலை வெறும் இலை மட்டும் இல்லை. அது வேதம் முதல் ஆயுர்வேதம் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நமது நாட்டின் பாரம்பரியத்தில் வெற்றிலை சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. கொரானா காலம் என்பதால் சாதாரண சளி, இருமலுக்கு எந்த ஸ்பெஷலிஸ்டிடம் செல்வது? என்று யோசிக்கும் நிலை தற்போது ஏற்பட்டு விட்டது. கவலை வேண்டாம். அதனை குணப்படுத்த வெற்றிலை சூப் நல்ல ஒரு மருந்தாக அமையும்.

தீராத சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும் வெற்றிலை சூப் - எப்படி செய்வது என்று பாருங்க... | Lifestyle Health

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 கப்

சீரகப் பொடி - அரை ஸ்பூன்

மிளகு பொடி - அரை ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

துளசி இலை - 1 கைப்பிடி

வெற்றிலை, தூதுவளை இலை - 1 கைப்பிடி அளவு

புளிக்கரைசல், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துளசி மற்றும் வெற்றிலையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடானதும் மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை, புளிக்கரைசல், இஞ்சி, தக்காளி, மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக கொதித்ததும் வடிகட்ட வேண்டும். பின்னர், மிளகுப்பொடி ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து பருக வேண்டும்.

இந்த வெற்றிலை சூப்பை நீங்கள் குடித்து வந்தால் எப்பேற்பட்ட காய்ச்சலும், சளியும் பறந்து போகும்.