பற்களின் மஞ்சள் கறை உங்களை சிரமப்பட வைக்கிறதா? கவலை வேண்டாம்... வெள்ளையாக்க இதோ இயற்கை டிப்ஸ்

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது சுத்தம் கேள்விக் குறியாகிவிடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவற்றை காரணமாக கூறலாம்.

ஒருவருக்கு வாய் சுகாதாரம் மிகவும் இன்றியமையாதது. வாய் நன்கு சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், வாயின் வழியே கிருமிகள் உடலினுள் நுழைவதைத் தடுக்க முடியும். பலர் பற்களில் படியும் கறைகளைப் போக்க பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்வார்கள். ஆனால் பற்களை பல் மருத்துவமனை சென்று சுத்தம் செய்தால், பற்களின் எனாமல் குறைந்து, பல் கூச்சம் ஏற்படும்.

நம் ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற பகுதிக்கு ‘எனாமல்’என்று பெயர். இதற்கு அடுத்த பகுதியாக இருப்பது ‘டென்டின்’ (Dentin). ஒருவருக்கு டென்டின் எந்த நிறத்தில் அமைகிறதோ அந்த நிறம் தான் அவருடைய பற்களின் நிறம். பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இது புன்னகையை அழகாக்க மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் குறிக்கிறது.

இரவு பல் துலக்குதல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும் முன் பல் துலக்குவது அவசியமான ஒன்றாகும். இவை பற்களில் உள்ள கறைகளை நீக்க துணைபுரியும்.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணெயை ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் அந்த எண்ணெயை துப்ப வேண்டும். இப்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் செல்லும் போது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் குறைந்து, பற்கள் வெண்மையாக காட்சியளிக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கொண்டு பற்களை சுத்தம் செய்தால் கறைகள் நீங்கும். ஆனால் பல் மருத்துவரிடம் ஆலோசனையின் பேரில் மட்டுமே இதனை பயன்படுத்தலாம்.

உப்பு

தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

கிராம்பு தூள்

1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம்.

கொய்யா பழம்

கொய்யா பழம், ஸ்ட்ராபெரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறை நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து ,அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

கேரட், பேரிக்காய்

அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.    


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்