முடி கருகருவென நீளமாக வளர ஆசையா? இதோ பாட்டி வைத்தியம்

lifestyle-health
By Nandhini Oct 11, 2021 10:03 AM GMT
Report
120 Shares

ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதிலும் நீளமான அல்லது அடர்த்தியான கூந்தலுடைய பெண்களை காணும் போது, நாமும் இது போன்ற கூந்தலை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், பெரும்பாலான பெண்கள் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் ஸ்பில்ட் எண்ட்ஸ் போன்ற முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

வீட்டில் எங்கு பார்த்தாலும் முடிகள் கிடக்கின்றன. தலைவாரும் போதெல்லாம் அப்படியே வேரோடு கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன. தலை வாருவதற்கே பயமாக இருக்கிறது என்கிற கவலை ஒவ்வொரு பதின் வயது பெண்களுக்கும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த பிரச்ச்னை பதின் வயதுகளில் மட்டும் அல்ல... அதன் பிறகும் நீடிக்கவே செய்கிறது. ஆனால் இப்படிக் கவலைப்படுவதால் எல்லாம் முடி உதிர்வதைத் தடுக்க முடியாது.

ஆண்கள் அல்லது பெண்கள் யாராக இருந்தாலும் சரி அடத்தியான தலை முடியை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. பெண்களுக்கு அழகு அவர்கள் கூந்தலே. ஆனால் அதிகமாக காற்று மாசு உண்டாவதால் அது நேராக நமது சருமம் மற்றும் மூடிகளை பாதிக்கிறது. இதலில் இருந்து நமது முடியை பாதுகாத்து கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்து கொள்ள பல இயற்கையான முறைகள் உள்ளன.

முடி கருகருவென நீளமாக வளர ஆசையா? இதோ பாட்டி வைத்தியம் | Lifestyle Health

முடி கருகருவென வளர இதோ பாட்டி வைத்தியம் - 

முடக்கத்தான் கீரை

முடி கருகருவென வளர, வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். நரை விழுவதையும் தடுக்கும்.

தேங்காய் எண்ணெய்

முடி கருகருவென வளர, கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு பதமான நிலையில் பொரித்து எடுத்து, எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலையில் மண்டை ஒட்டில் படும்படி மசாஜ் செய்து வந்தால் முடி நன்கு வளரும். முடி உதிர்தல் நின்று விடும்.

கறிவேப்பிலை

முடி கருகருவென வளர, வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண் சிமிட்ட வைத்திடும்.

மருதாணி

முடி கருகருவென வளர, 100 மில்லி தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு 'பேக்' போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்த ஷாம்பூ அல்லது சீயக்காயினால் அலசுங்கள்.

முட்டை

முடி கருகருவென வளர, முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும். முடியும் கருகருவென வளரும்.

வெங்காயச் சாறு

முடி கருகருவென வளர, வெங்காயச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின் தலைக்குக் குளித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.    


you may like this video