நெஞ்சு சளியை கரைக்கும் மிளகுக் குழம்பு! சுவையாக செய்வது எப்படி?

மிளகில் காரச்சத்துகள் அதிகமுள்ளது. இந்த காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

மழை மற்றும் குளிர்காலங்களில் பலருக்கும் ஜலதோஷம் தொற்றி சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இக்காலங்களில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று சிறிது வெண்ணீரை அருந்தினால் இத்தொல்லைகள் நீங்கும்.

இந்த மிளகு குழம்பை செய்து சாப்பிட்டால் நாள்பட்ட நெஞ்சு சளி கரைந்து போகும். மிளகு குழம்பை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம் - 

செய்முறை

 • தேவையான பொருட்கள்:
 • சின்ன வெங்காயம் - 100 கிராம்
 • பூண்டு - 30
 • புளி - 2 எலுமிச்சை அளவு
 • உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...

 • மல்லி (தனியா) - 6 டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
 • கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
 • மிளகு - 4 டேபிள் ஸ்பூன்
 • பச்சரிசி - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

நல்லெண்ணெய் - 12 டேபிள் ஸ்பூன்

கடுகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

 • புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.
 • சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
 • ஒரு வாணலியை அடுப்பை வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து இறக்க வேண்டும்.
 • பின்னர், அதை குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
 • பின்னர், அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
 • அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மிளகு குழம்பு ரெடியாகி விடும். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்