மவுத் வாஷ் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? அப்போ... இந்த விளைவுகள் உங்களுக்குத் தான்!
உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, வாயின் தூய்மையை பராமரிப்பதும் மிக முக்கியமானதாகும். சில பேர் வாய் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதனை சுத்தமாக பராமரிக்க மவுத்வாஷைப் பயன்படுத்து வருகிறார்கள். ஆனால், ஆல்கஹால் உட்பட பல பொருட்கள் இந்த மவுத்வாஷில் இருக்கின்றன.
இதனால், வாய் துர்நாற்றம், வாய் பாக்டீரியா, பிளேக் மற்றும் பிற வாய் மூலம் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு எதிராக பாதுகாப்பை மவுத் வாஷ் வழங்கும். ஆனால், அதிகளவில் மவுத் வாஷைப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்ப்போம் -
புற்றுநோய்
மவுத் வாஷ் போன்ற பொருட்களை தினமும் 3 முறைக்கு மேல் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக மருத்துவ ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
வாய் புண்
மவுத்வாஷில் ஆல்கஹால் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளன. இதனால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்கும் வேலைகளை செய்கிறது. ஆனால் அதிக அளவில், பயன்படுத்தும் போது, அது உங்கள் வாயின் மென்மையான திசுக்களையும் சேதப்படுத்தி விடும். இதனால், வாயில் புண்களையும் உண்டாக்கும்.
பற்கள்
ஆல்கஹால் அடிப்படையிலான மவுத் வாஷ் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே குழந்தைகள் அதனை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். பெற்றோர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் உள்ள அதிக அளவு ஆல்கஹால் குழந்தைகளின் மென்மையான பற்களை சேதப்படுத்தி விடும்.
வாய் உலரல்
ஆல்கஹால் அடிப்படையிலான மவுத்வாஷை அதிகமாகப் பயன்படுத்துவது வாயை உலர வைத்து விடும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
தலை சுற்றல், வயிறு கோளாறு
நீங்கள் தற்செயலாக மவுத்வாஷை விழுங்கிவிட்டால், அது மற்ற உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதில் அசாதாரண இதயத்துடிப்பு, தலைசுற்றல், தலை சுற்றல், வயிறு கோளாறு போன்றவை அடங்கும். எனவே மவுத் வாஷ் பற்களையும், வாயையும் ஆரோக்கியமாக வைக்கும் என்றாலும், அதனை கவனமாக பயன்படுத்துவது சிறந்தது.