தினமும் வெறும் வயிற்றில் ஓமம் நீரை பருகி வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?

lifestyle-health
By Nandhini Sep 21, 2021 02:39 AM GMT
Report

மிகச்சிறிய அளவிலான நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம். இந்த ஓமம் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள். ஓமம் ஆசிய நாடுகளைப் பிறப்பிடமாக கொண்டது. முக்கியமாக இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் பயிரிடப்படுகிறது.

இதனால் வட இந்திய பகுதிகளில் ஓமமானது பூரி, கச்சோரி, ரசம், கதி போன்ற பல உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓமம் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது.

பசியைத் தூண்டும். வாயுவை அகற்றும், வெப்பம் உண்டாக்கும், உடலை பலமாக்கும்; உமிழ் நீரைப் பெருக்கும். ஓமத்தை உணவில் சேர்த்துக் கொண்டு வர அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீதபேதி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், நியாசின் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் வெறும் வயிற்றில் ஓமம் நீர் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -

ஓமம் நீர் தயாரிக்கும் முறை

இரண்டு தேக்கரண்டி ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அடுத்த நாள் காலையில் ஓமத்தினை நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைத்து அதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.

ஓமம் நீரின் பயன்கள்

வாயு பிரச்சனை

வாயுத் தொல்லை ஒருவருக்கும் ஏற்படுவதற்கு, உண்ணும் உணவுகள் அல்லது உடல் உழைப்பு இல்லாத, பல வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாகும். இந்த வாயுத் தொல்லையை நீக்க தினமும் வெறும் வயிற்றில் ஓமம் நீரை பருகி வர வேண்டும்.

உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க வேண்டுமானால் தினமும் வெறும் வயிற்றில் ஓமம் நீரை பருகி வர வேண்டும். இப்படி பருகி வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உடல் எடையையும் மிக விரைவில் குறையும்.

நெஞ்சு சளி

ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பருகினால் நெஞ்சு சளி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். தினமும் வெறும் வயிற்றில் ஓமம் நீரைப் பருகி வந்தால் நல்ல பசியும், நல்ல தூக்கம் கிடைக்கும்.

உயர் ரத்த அழுத்தம் குறைய

உயர் ரத்த அழுத்தம் குறைய தினமும் வெறும் வயிற்றில் ஓமம் நீரை பருகி வர வேண்டும். இப்படி பருகி வந்தால், ஓமம் இரத்த நாளங்களை தளர்த்தி, அதனை விரிவடைய செய்கிறது. இதனால் உயர் அழுத்தம் குறைக்கப்படுகிறது.