உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா? அப்போ இந்த ‘7’ உணவுகளை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்க...

lifestyle-health
By Nandhini Sep 20, 2021 09:43 AM GMT
Report

இன்றைய அதிவேக உலகில் பலர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த நாளங்களில் இரத்தத்தின் இயல்பான வேகமானது அசாதாரணமான அளவில் அதிகரிக்கும் ஒரு நிலை ஆகும்.

இதன் விளைவாக, உங்கள் இரத்த நாளங்களின் சுவர்கள் பலவீனமடைந்து, உங்கள் இதயம் வழக்கமான விகிதத்தை விட அதிகமாக ’பம்ப்’ செய்யத் தொடங்குகிறது. இந்த வேகமான ‘பம்பிங்’ உங்கள் இதயத்தை அதிகமாக உழைக்க வைப்பதால் மாரடைப்பு மற்றும் பிற மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உங்கள் உணவு உங்கள் இரத்த அழுத்தத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும் இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது.

இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.

உயர் இரத்த அழுத்ததை குறைக்க இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று பாருங்க -

காபி :

காபியில் உள்ள காஃபின் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கிறது. அதனால்தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை மிகவும் குறைக்க வேண்டும்.

உப்பு :

அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லதல்ல. ஊறுகாய் வத்தல் போன்றவற்றில் அதிக உப்பு இருக்கும். உணவு நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்க உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே இதனை தவிர்க்கவும்.

சர்க்கரை:

சர்க்கரை அதிகம் எடுத்துக் கொண்டால், அது உயர் ரத்த அழுத்தம் மட்டுமல்ல. பல நோய்களுக்கு வழிவகுக்கும். உடல் பருமன், பல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம். சர்க்கரை உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி:

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். இறைச்சிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனுடன் சேர்ந்து வரும் சாஸ்கள், ஊறுகாய், சீஸ் அல்லது ரொட்டியில் உள்ள அதிக சோடியம் நிறைந்த உணவும் உடலுக்கு நல்லது கிடையாது. 

பிரெட்:

பிரெட் மைதாவால் ஆனது என்பதால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது. மைதா உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்து விடும். 

பீனட் பட்டர்:

Peanut Butter எனப்படும் வேர்க்கடலை வெண்ணெய் ஆரோக்கியமானது கிடையாது. இது கொழுப்பின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் அதிக சோடியம் உள்ளதன் காரணமாகவும், இது மிகவும் தவிர்க்க வேண்டும். இருப்பினும், அதற்குப் பதிலாக உப்பு சேர்க்காத வேர்க்கடலை வெண்ணெய் பயன்படுத்தலாம்.