முகத்திற்கு அழகு சேர்க்கும் அரிசி மாவு - இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க... அசந்துடுவீங்க...

ஆண், பெண் என வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை தான். சிலர் அழகாக இருப்பார்கள்.

ஆனால் அவர்களது முகத்தில் முகப்பருவும், பருக்கள் இருந்த அடையாளமும் முக அழகை கெடுத்து கொண்டிருக்கும். வெயிலில் சுற்றி சுற்றி கருமை படர்ந்து, உடலில் வெயில்படும் இடங்களில் மட்டும் கருமையாக ஒரு சிலருக்கு மாறி இருக்கும்.

பெரும்பாலும் பலர் தங்களது முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் வீட்டிலேயே தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தெந்த பொருளை எப்படி பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது பற்றி சுத்தமாக தெரியாது.

முகம் பொலிவடைய

அரிசி மாவு, தயிர் மற்றும் தேன் கலந்து முகத்திற்கு போட வேண்டும். பின் காய்ந்ததும் முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும்.

முகம் பளபளப்பாக

அரிசி மாவு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தேய்த்து பிறகு நன்றாக கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

கருமை நீங்க

பால் மற்றும் அரிசி மாவை கலந்து முகத்திற்கு போட்டு சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பாகும்.

சரும அழற்சிக்கு

அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.

இறந்த செல்கள் நீங்க

அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள்

கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் நன்கு ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம். ​

மேக் அப்

மேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்